கமல்ஹாசனுடன் இணையும் இரண்டு சூப்பர் ஸ்டார் நடிகர்கள்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார் நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் கமல்ஹாசனுடன் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

பிரபல மலையாள எழுத்தாளர் எம்டி வாசுதேவன் சிறுகதைகளை கொண்டு ஆந்தாலஜி திரைப்படம் ஒன்று மலையாளத்தில் உருவாக உள்ளதாகவும் இந்த சிறுகதைத் தொகுப்பில் ஐந்து பகுதிகள் இருக்கும் என்றும் அதில் கமல்ஹாசன் மோகன்லால், மமூட்டி, பகத் பாசில் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கமல்ஹாசனுடன் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே ஆந்தாலஜி திரைப்படங்கள் ரசிகர்கள் இதில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகின்றன என்பதும் குறிப்பாக சமீபத்தில் வெளியான புத்தம் புது காலை விடியாதோ என்ற ஆந்தாலஜி படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே.