'தல 57' படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
Wednesday, October 26, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
'சிறுத்தை' சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் ஸ்டைலிஷ் த்ரில்லர் படமான 'தல 57' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் நடந்த ஐரோப்பிய படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் சில்வா ஸ்டண்ட் இயக்குனராக இந்த படத்தில் பணியாற்றிய நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ஐதராபாத் படப்பிடிப்பில் நடைபெறும் ஆக்சன் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குனர் கணேஷ் இயக்கி வருகிறார்.
ஸ்டண்ட் இயக்குனர் கணேஷ் ஏற்கனவே இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளிவந்த 'சிறுத்தை' மற்றும் 'வீரம்' படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'தல 57' படத்தின் வில்லன் விவேக் ஓபராய் என்று கூறப்படுகிறது. அனிருத் இசையில் சிவா இயக்கி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment