ஆன்லைன் வகுப்பால் அடுத்தடுத்து பலியான இரண்டு உயிர்கள்: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Wednesday,September 02 2020]
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பு காரணமாக அடுத்தடுத்து ஒரு மாணவி மற்றும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மேட்டுநன்னாவரம் என்ற பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் கல்லூரியிலும் ஒரு மகள் பன்னிரெண்டாம் வகுப்பும் இன்னொரு மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர்களது வீட்டில் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மட்டுமே இருக்கும் நிலையில் அதில் மூத்த மகள் மட்டும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி ஆன்லைன் பாடங்களை படித்து வந்ததாக தெரிகிறது. இதனால் மற்ற இரண்டு மகள்களும் சண்டை போட்டதால் மூவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மூத்த மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆண்டிபட்டியில் உள்ள ஒரு மாணவன் ஆன்லைன் வகுப்பு புரியாததால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டிபட்டி அருகே கரட்டிப்பட்டியில் என்ற பகுதியில் பதினோராம் வகுப்பு படித்து வரும் மாணவர் விக்கிரபாண்டி, ஆன்லைன் வகுப்பு புரியாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பு காரணமாக அடுத்தடுத்து ஒரு மாணவி மற்றும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..