கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய இரண்டு மாநில முதலமைச்சர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாஸன் இன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகம் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் கமல்ஹாசனின் பிறந்த நாள் குறித்த ஹேஷ்டேக் இன்று காலை முதல் டிரெண்டிங்கில் உள்ளது.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு இரண்டு மாநில முதல்வர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில், ‘தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்’ என கூறியுள்ளார். அதற்கு கமல்ஹாசன் ’உங்கள் வாழ்த்துக்களுக்கும், தோழமை பாராட்டும் மனதிற்கும் என்றென்றும் நன்றியுடன் கமல்ஹாசன்’ என்று நன்றி தெரிவித்துள்ளார்.
அதேபோல் அண்டை மாநிலமான கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது பிறந்த நாள் வாழ்த்துக் கூறி இருப்பதாவது: இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒரு இணையற்ற கலைஞனாக, நீங்கள் தொடர்ந்து எங்களை ஆச்சரியப்படுத்துகிறீர்கள். ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விஷயங்களை நீங்கள்தொடர்ந்து கடைப்பிடிப்பது எங்களை ஊக்குவிக்கிறது. நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். கேரள முதல்வரின் வாழ்த்துக்கு கமல்ஹாசன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
Thank you honourable Chief Minister of Kerala @pinarayivijayan https://t.co/mwvCBzbnDP
— Kamal Haasan (@ikamalhaasan) November 7, 2022
உங்கள் வாழ்த்துக்களுக்கும், தோழமை பாராட்டும் மனதிற்கும் என்றென்றும் நன்றியுடன் கமல்ஹாசன். https://t.co/kdZrpTrEwH
— Kamal Haasan (@ikamalhaasan) November 7, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments