இந்தியாவிலும் கொரோனா.. உறுதி செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் முதல் முறையாக இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து தொடங்கி உலகின் அறுபதுக்கு மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. முதல் முறையாக இந்தியாவிலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒருவரும் தெலுங்கானாவில் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்தவர் அண்மையில் இத்தாலி சென்றுவிட்டு திரும்பியுள்ளார். தெலுங்கானாவைச் சேர்ந்தவர் சமீபத்தில் துபாய் சென்று நாடு திரும்பியிருக்கிறார்.
இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Update on #COVID19:
— Ministry of Health (@MoHFW_INDIA) March 2, 2020
Two positive cases of #nCoV19 detected. More details in the Press Release.#coronoavirusoutbreak #CoronaVirusUpdate pic.twitter.com/kf83odGo8f
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout