டிஜிபி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற காவலர்கள்: சென்னையில் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக மன உளைச்சல் காரணமாக காவலர்கள் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில் இன்று இரண்டு காவலர்கள் சென்னை டிஜிபி அலுவலகம் முன்பே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
தேனி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு காவலர்கள் தங்களை எந்தவித காரணமும் இன்றி இடமாற்றம் செய்ததாகவும், இதுகுறித்து மேலதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் எந்தவித பதிலும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் தேனி மாவட்டத்தை சேர்ந்த இந்த இருவரும் அதேமாவட்டத்தை சேர்ந்த துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் அலுவலகத்திலும் புகார் அளித்தும், அந்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இரண்டு காவலர்கள் மீது தண்ணீர் ஊற்றிய மற்ற காவலர்கள் அவர்கள் இருவரையும் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சம்பவத்தால் டிஜிபி அலுவலகம் முன் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments