மறுமணம் செய்ய விரும்பிய விவாகரத்து ஆன டீச்சருக்கு நேர்ந்த விபரீதம்:
Send us your feedback to audioarticles@vaarta.com
கணவரை விவாகரத்து செய்த 43 வயது டீச்சர் ஒருவர் மறுமணம் செய்ய விரும்பியபோது ஏற்பட்ட பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த சசிகலா என்ற 43 வயது டீசர் சமீபத்தில் தனது கணவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் அவர் ஒரு விழாவில் கலந்து கொண்டபோது தன்னுடைய பள்ளியில் படித்த ஆசாத் என்பவரை சந்தித்தார். அவரிடம் மனம்விட்டு தனது நிலையை பகிர்ந்து கொண்ட போது ஏற்கனவே திருமணமானவராக இருந்தாலும் சசிகலாவை திருமணம் செய்து கொள்ள ஆசாத் விரும்பியதாகவும், சசிகலாவும் இந்த திருமணத்திற்கு சசிகலாவும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் சசிகலா, ஆசாத் இருவரும் கடந்த சில வாரங்களாக போனில் ஒருவரை ஒருவர் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தாக தெரிகிறது. ஆனால் திடீரென ஆசாத் சசிகலாவை போனில் தொடர்பு கொள்ளவில்லை. இதனால் சசிகலா குழப்பத்தில் இருந்த போது ஆசாத்தின் நண்பர் என்று கூறி போன் செய்த ஒருவர், ஆசாத் உடன் திருமணம் சசிகலாவை செய்து வைப்பதாகவும் அதற்காக தனக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்கு சசிகலாவும் ஒப்புக் கொண்டு அவர் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் சசிகலாவை போனில் தொடர்பு கொண்ட நபர் காரில் கடத்தியுள்ளனர். அவரிடம் இருந்த பணத்தை பிடுங்கி விட்டு அவரை இரண்டு நாட்கள் காரிலேயே அலைக்கழித்துள்ளன. இதனை அடுத்து திடீரென அந்த காரில் இருந்து தப்பித்து வந்த சசிகலா போலீசில் புகார் அளித்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், டீச்சர் சசிகலாவை கடத்திய 3 பேர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஆசாத்தின் நெருங்கிய நண்பர்கள் என்றும் தற்செயலாக ஆசாத், டீச்சரிடம் ஏற்பட்ட காதல் குறித்து கூறியதை அடுத்து ஆசாத்துக்கு தெரியாமல் டீச்சரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து எதுவுமே ஆசாத்துக்கு தெரியாது என்பது ஒரு அதிர்ச்சியான தகவல் ஆகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com