முதல் வாரமே டபுள் நாமினேஷன்.. ஜோவிகாவை குறி வைக்கும் போட்டியாளர்கள்..!

  • IndiaGlitz, [Monday,October 02 2023]

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்ட நிலையில் இன்று முதலாவது நாளில் ’லியோ’ படத்தில் இடம்பெற்ற ‘நா ரெடி’ என்ற பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது என்பதும் போட்டியாளர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளார்கள் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் கேப்டன் பதவியை தங்களுக்கு பெரும் முயற்சியை செய்யாத ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் சிறிய வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் பெரிய வீட்டில் 12 போட்டியாளர்கள், பிக்பாஸ் சிறிய வீட்டில் 6 போட்டியாளர்களும் இருக்கும் நிலையில் இரண்டு நாமினேஷன் உண்டு என்று பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

அதாவது பெரிய வீட்டில் உள்ளவர்கள் சிறிய வீட்டில் உள்ளவர்களை நாமினேஷன் செய்ய வேண்டும் என்றும், சிறிய வீட்டில் உள்ளவர்கள் பெரிய வீட்டில் உள்ளவர்களை நாமினேஷன் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதையடுத்து பெரிய வீட்டு உள்ளவர்கள் பவா செல்லத்துரை, ஐஷு, ஆகியோர்களும், அதேபோல் சிறிய பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஜோவிகா, பிரதீப் மற்றும் கூல் சுரேஷ் ஆகியோர்களை நாமினேஷன் செய்கின்றனர்

முதல் வாரமே ஜோவிகா, ஐஷு, பவா செல்லதுரை, கூல் சுரேஷ், பிரதீப் ஆகியோர்களை குறி வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

துஷாராவை அடுத்து 'தலைவர் 170' படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் 'தலைவர் 170'. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில்

சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும்

24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் K.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C  நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம்

'அயலான்' டீசர் எப்போது? சிவகார்த்திகேயன் அதிரடி அறிவிப்பு..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில்

'தலைவர் 170' படத்தில் இணைந்த பிரபல நடிகை.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும்

முதல் நாள் முதல் பாடல்.. ரவீனாவை இடுப்பில் தூக்கி உட்கார வைத்த மணி..!

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக தொடங்கிய நிலையில் அந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று முதல் நாளில் வேக்கப் பாடல்