இந்தியாவில் கொரோனா வைரஸ்.. நொய்டாவில் இரண்டு பள்ளிகள் மூடல்..!

  • IndiaGlitz, [Tuesday,March 03 2020]

கோரோனோ வைரஸ் அச்சம் காரணமாக நோய்த்தாவில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராம் மில்லினியல் பள்ளி மற்றும் சிவ் நாடார் பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்பாததால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இதுவரை இந்தியாவில் டெல்லியில் ஒன்று, தெலுங்கானாவில் ஒன்று, கேராளாவில் மூன்று என ஐந்து காரோண வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கேரளாவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குணமாக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியின் குழந்தை நொய்டாவில் உள்ள ஸ்ரீராம் பள்ளியில் படித்து வருவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டியுள்ளனர். எனவே பள்ளியானது நடைபெற்று வந்த பள்ளி இறுதித் தேர்வை ஒத்திவைத்து பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. சிவ் நாடார் பள்ளியானது முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளியினை மூடியுள்ளது.