Zombie இருப்பது உண்மையா? விளக்கம் அளிக்கும் வைரல் வீடியோ!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அறிவியல் பூர்வமாக இருந்தாலும் சில விஷயங்களை அவ்வளவு எளிதாக நம்பமுடியாது. அப்படியான ஒரு விஷயம்தான் ஜோம்பிஸ் (Zombie). அதாவது இறந்த உடல்கள் மீண்டும் சில காரணங்களால் இயங்க முடியும் என்று சொல்லும் அறிவியல் உண்மைதான் இந்த ஜோம்பிஸ். இதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றே அறிவியல் சொல்கிறது. உண்மையில் இதுபோன்ற நிலைமை இருந்தால் எப்படி இருக்கும் என்பதை விளக்க பல ஹாலிவுட் படங்கள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. ஏன் நம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்தியத் திரைப்படங்களும் வரிசைக்கட்டி நிற்கின்றன.
அந்த வகையில் தற்போது டென்மார்க்கில் Zombie யாக மாறும் ஈக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. ஈக்கள் மற்றும் சில வகை சிறிய பூச்சிகளின் அடிவற்றில் நுழைந்து அந்த உயிரினத்தை முழுவதுமாகச் சாப்பிடும் 2 பூஞ்சை வகைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்த பூஞ்சைகள் ஈ மற்றும் பூச்சிகளை முழுவதுமாகச் சாப்பிட்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதன் பிறப்புறுப்பு வரை அனைத்தையும் உண்டு விடுகிறது. இதனால் அந்த உயிரினம் சில மணி நேரங்களில் அழிந்தும் (இறந்தும்) விடுகிறது.
ஆனால் உயிரிழந்த அந்த உயிரினம் சில மணித்துளிகளில் மீண்டும் இயங்க முடிகிறது. அதாவது செத்த ஈ அல்லது ஒரு பூச்சி வழக்கம் போல மீண்டும் பறக்கிறது. இதற்குக் காரணம் ஸ்ட்ராங்க்வெல்சி யா டைக்ரினா மற்றும் ஸ்ட்ராக்வெல்சியா அசெரோசா எனும் 2 வகை பூஞ்சைகள்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்தப் பூஞ்சைகள் ஈக்களில் ஆரம்பித்து சிறிய பூச்சிகள் வரை அனைத்தையும் உண்டு செரித்து கடைசியில் இறந்த உயிரினத்தை மீண்டும் தன்னுடைய ஆற்றலால் பேய் மாதிரி இயக்குகிறது. மேலும் இப்படி மாறிய Zombie வெடித்து சிதறும் போது மற்ற பூச்சி மற்றும் ஈக்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இதில் இருக்கும் ஒரே ஆறுதல் Zombie களாக மாறிய ஈ அல்லது பூச்சிகள் மனிதர்களை கடித்தாலோ அல்லது தொட்டாலோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கோபன் ஹேகன் பல்கலைக்கழக ஆராயச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் கோபன் ஹேகன் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் உண்மையில் Zombie இருப்பதற்கான ஆதாரமும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இந்த 2 பூஞ்சைகளும் கோயனோசியா டைக்ரினா மற்றும் கொயனோசியா டெஸ்டேசியா எனும் ஈ மற்றும் சிறிய பூச்சிகளை மட்டுமே தாக்கி அழிக்கிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் மற்ற உயிரினங்கள் பாதிக்கப்படும் சூழல் ஒருவேளை எதிர்காலத்தில் வந்தால் உயிரினங்களின் வாழ்வியல் என்னவாகும் என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த அனைத்து ஆய்வுத் தகவல்களும் ஜர்னல் ஆஃப் இன்வெர்டெபிரேட் நோயியல் எனும் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com