சென்னை சட்ட ஒழுங்கை பாதுகாக்க 2 புதிய ஐ.ஜிக்கள் நியமனம்

  • IndiaGlitz, [Monday,December 05 2016]

தமிழக முதல்வரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அடுத்து பிற நகரங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் சென்னையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

முதல்வர் சிகிச்சை பெற்றுவரும் அப்பல்லோ மருத்துவமனை நோக்கி நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்து கொண்டே வருகின்றது. அதுமட்டுமின்றி சென்னை நகரமே அசாதாரணமாக உள்ளது.

இந்நிலையில் சென்னையின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சாரங்கன், ஜெயராமன் என இரண்டு கூடுதல் ஐ.ஜி-க்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க சென்னை முழுவதும் காவல் நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் உள்பட ஏராளமான போலீசார் சென்னையின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

More News

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடர்கிறது. அப்பல்லோ அறிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதாக செய்திகள் வெளியானது தவறு என்றும் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சற்று முன் காலமானார். அவரது காலமான செய்தி கேட்டு அதிமுக தொண்டர்கள் உள்பட தமிழக மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்...

சாதி அரசியல் செய்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் படம். 'மாவீரன் கிட்டு' குறித்து திருமாவளவன்

கோலிவுட்டில் வெளியாகும் நல்ல, தரமான திரைப்படங்களுக்கு ஊடகங்கள் மட்டுமின்றி ஒருசில அரசியல்வாதிகளும் பாராட்டி விமர்சனம் செய்து வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்...

ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஜோதிடம் கூறுவது என்ன?

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமானது...