டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பிய மேலும் இருவருக்கு கொரோனா!

டெல்லியில் கடந்த மார்ச் 13 முதல் 15 வரை நடைபெற்ற மத மாநாட்டில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பிய 45 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் நமது அண்டை மாநிலமான புதுவையில் இருந்து டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுவையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த பெண் வீடு திரும்பிய நிலையில், புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது புதுவை மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதனையடுத்து டெல்லி சென்று திரும்பிய கொரோனா பாதிக்கப்பட்டவர்கள்புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

தமிழகத்தில் கொரோனா பாதித்த ஐவர் குறித்த தகவல்: அமைச்சர் விஜயபாஸ்கர் 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தியின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பலர் இன்னும் மீண்டு வரவில்லை.

டெல்லி மத மாநாடு: நிஜாமுதீன் மவுலானா மீது எஃப்ஐஆர்

கடந்த மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மத வழிபாடு மாநாடு நடந்த நிலையில் இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்துள்ளது

தமிழகத்தில் மேலும் 50 பேர்களுக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 124 ஆனதால் அதிர்ச்சி

இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது 

கணவனை கொலை செய்த மனைவிக்கு ஜாமீன்: தொலைபேசியில் விசாரணை செய்த நீதிபதி

கணவனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனைவிக்கு  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தொலைபேசியிலேயே விசாரணை செய்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார் 

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் அடித்து கொலை: ஒரு அதிர்ச்சி சம்பவம்

கொரோனா வைரஸ் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் உடனடியாக சுகாதாரத் துறைக்கு