அமெரிக்காவிலும் கோலோச்சும் இந்தியர்கள்!!! வெள்ளை மாளிகையின் புதிய நிர்வாகத்தில் இத்தனை நபரா???
Send us your feedback to audioarticles@vaarta.com
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த ஜோ பிடன் அறுதிப் பெரும்பான்மை வெற்றிப் பெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வுச் செய்யப்பட்டு இருக்கிறார். அதோடு ஜோ பிடனின் கொள்ளு கொள்ளு கொள்ளு தாத்தா சென்னையில் வாழ்ந்து இருக்கலாம் என்றொரு தகவலையும் கடந்த சில தினங்களாக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் வருகிற ஜனவரி 20 ஆம் தேதி ஜோ பிடன் புதிய அதிபராகப் பதவி ஏற்க உள்ளார். இதனால் வெள்ளை மாளிகை தனது புதிய நிர்வாகத்திற்கு உதவும் வகையில் சில முக்கிய அணிகளை நியமித்து இருக்கிறது. அந்த அணிகளின் வரிசையில் 2 முக்கிய அணிகளுக்கு தலைமையாக இந்திய-அமெரிக்கர்களை நியமித்து இருக்கிறது. இதனால் வெள்ளை மாளிகையின் புதிய நிர்வாகத்திற்கு இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட 2 பேர் தலைமை தாங்கி நடத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2 தலைவர்கள் உட்பட மேலும் நிர்வாகக் குழுவின் பல்வேறு துறைகள் மற்றும் முகவர் நிறுவனங்களுக்கு இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட 21 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர். இதனால் அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தில் அதிகளவு இந்தியர்கள் இடம் பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் கொரோனா ஆலோசனை கட்டுப்பாட்டு குழுவின் இணைத் தலைவர்களாக 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் டாக்டர் விவேக் மூர்த்தி மற்றும் டாக்டர் செலின் ராணி கவுண்டர் எனும் இந்திய-அமெரிக்கர்களும் அடக்கம். அடுத்து அணு ஆயுதங்களை வடிவமைத்தல் உற்பத்தியாளர்கள் மற்றும் சோதனை செய்யும் எரிசக்தி துறையை கையாளும் குழுவின் தலைவர்களாக 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் ராமமூர்த்தி ரமேஷ் என்பவரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தவிர, சுமோனா குஹா, புனித் தல்வார், தில்பிரீத் சித்து, பவ்னீத் சிங், அருண் வெங்கடராமன், பிரவினா ராகவன், ஆத்மான் திரிவேதி, ஆஷா எம். ஜார்ஜ், சுபஸ்ரீ ராமநாதன், பவ்யா லால், ஷீதல் ஷா, அஸ்வின் வாசன், மீனா சேஷாமணி, ராஜ் தே, சீமா நந்தா, ராஜ் நாயக், ரீனா அகர்வால், திவ்யா குமாரையா, குமார் சந்திரன், அனீஷ் சோப்ரா ஆகியோரும் புதிய நிர்வாகக் குழுவில் பங்குபெற உள்ளனர். இந்த அறிவிப்பால் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமை கொள்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments