இந்தியாவுக்கு மேலும் இரண்டு தங்கம்: அசத்தும் இந்திய வீராங்கனைகள்

  • IndiaGlitz, [Sunday,April 08 2018]

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில்
ஏற்கனவே பளுதூக்கும் போட்டியில் 48 கிலோ பெண்கள் பிரிவில் மீராபாய் சானுவும், 53 கிலோ பெண்கள் பிரிவில் சஞ்சிதா பானுவும், 77 கிலோ ஆண்கள் பிரிவில் சதீஷ்குமாரும், 85 கிலோ பளுதூக்கும் எடைப்பிரிவில் வெங்கட் ராகுலும் தங்கம் வென்றுள்ளனர். எனவே நான்கு தங்கப்பதக்கங்களை வென்றுள்ள இந்தியா இன்று ஒரே நாளில் இரண்டு தங்கம் பெற்று அசத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பூனம் யாதவ் என்ற வீராங்கனை பளுதூக்கும் பிரிவில் 69 கிலோ எடைப் பிரிவில் இன்று தங்கம் பெற்றுள்ளார். இவர் மொத்தம் 222 கிலோ தூக்கி தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

மேலும் மகளிர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் என்ற வீராங்கனை 10 மீ பிரிவில் தங்கம் வென்று சாதனை புரிந்தார். அதுமட்டுமின்றி இந்தியாவின் ஹினா சித்து  என்பவர் மகளிர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீ பிரிவில் வெள்ளி வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

இன்று கிடைத்த இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்கள் காரணமாக இந்தியா மொத்தம் 6 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை பெற்று 3வது இடத்தில் உள்ளது.

More News

பளுதூக்கும் போட்டியில் மேலும் ஒரு தங்கம்: இந்தியா அசத்தல்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் போட்டியில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் இந்தியா தங்கம் பெற்றுவிடும்போல் தெரிகிறது.

சல்மான்கான் ஜாமீன் மனு: ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சல்மான்கானின் ஜாமீன் மனு இன்று விசாரணை செய்யப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

சினிமாவில் உலக நாயகன்: அரசியலில் நகைச்சுவை நாயகன்; செல்லூர் ராஜூ

தமிழக அமைச்சர்களில் நெட்டிசன்களால் அதிகம் கலாய்க்கப்பட்டவர் அமைச்சர் செல்லூர் ராஜு தான் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தெர்மோகோல் குறித்த மீம்ஸ்கள் பல நாட்கள் டுவிட்டரில் டிரெண்ட்டாக இருந்தது

தனுஷின் அடுத்த படத்தில் பியர்ஸ் பிராஸ்னன்?

தனுஷ் இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் ஒரு படத்தை இயக்குவதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் ஒருசில ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கவுள்ளதாக அப்போதே கூறப்பட்டது

தனுஷ் படத்தில் குஷ்பு அல்லது ரம்யாகிருஷ்ணன்?

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி நடித்த பா.பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் தற்போது கன்னடத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது.