close
Choose your channels

அஜித்தின் 'ஏகே 61' படத்துடன் மோதும் 2 பிரபல நடிகர்களின் படங்கள்!

Monday, June 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏகே 61’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதே தினத்தில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர் என்றும் அதற்கேற்றவாறு படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் திட்டமிட்டு நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார்த்தி நடித்த ’சர்தார்’ திரைப்படம் தீபாவளி அன்று ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட உள்ளது.

இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக ஜெயம் ரவியின் ’இறைவன்’ என்ற திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் அகமது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாகவும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே வரும் தீபாவளியன்று அஜீத்தின் ‘ஏகே 61’ , கார்த்தியின் ‘சர்தார்’ மற்றும் ஜெயம் ரவியின் ’இறைவன்’ என மூன்று படங்கள் வெளியாக உள்ளதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment