முத்தழகிற்கு நடந்த கொடுமையை விட மிகப்பெரிய வன்முறை: 'பருத்திவீரன்' விவகாரத்தில் 2 இயக்குனர்கள் கண்டனம்..!

  • IndiaGlitz, [Friday,December 01 2023]

கடந்த சில நாட்களாக ’பருத்தி வீரன்’ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் அமீர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஞானவேல் ராஜா தனது வருத்தத்தை தெரிவித்தார். அவர் வருத்தம் தெரிவித்த போதிலும் சசிகுமார் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் அந்த வருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் இயக்குனர்கள் சேரன் மற்றும் நந்தா பெரியசாமி ஆகிய இருவரும் அமீருக்கு ஆதரவாக தங்களது குரலை கொடுத்துள்ளனர். இது குறித்து சேரன் கூறியதாவது:

சேரன்..

மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு.
காலம் நூறு கடந்தாலும் பணமும், புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே. திமிராய் இரு.

நீயின்றி அவர்களில்லை என்ற கர்வம் மட்டும் போதும். உண்மையும், சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும்.

நந்தா பெரியசாமி கூறியதாவது:

பருத்தி வீரன் படத்தில் முத்தழகிற்கு நடந்த கொடுமையை விட மிகப்பெரிய வன்முறையை அதன் இயக்குநர் அமீருக்கு நடத்தியிருக்கிறார்கள்... கார்த்தி என்ற பருத்திவீரனை நம்பிய முத்தழகின் முடிவு வேண்டுமானால் துயரத்தில் முடியலாம். இயக்குநர் அமீருக்கு அப்படியல்ல... அவர் இன்னும் வீறு கொண்டு எழுவார். படைக்கு அஞ்சாத அவருக்கு கை கோர்க்க தம்பிமார்கள் பலரும் இருக்கிறோம்...



தொழுகை தவறாத அவர் அருகே இறைவனும் சத்தியமும் இருக்கிறது. பகைவனுக்கும் அருள்கின்ற அவர் புன்னகை இன்னும் அவரை பலமாக்கும். துரோகமற்ற பல பருத்தி வீரன்களை அவர் இனி தொடர்ந்து படைப்பார். மாசற்ற ஒரு அற்புதமான மனிதனுக்காக நாம் ஒன்று கூடுவோம்... அவர் பக்கம் துணை நிற்போம்...