தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு: இம்முறை சிக்கிய இராஜபாளையம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்போதைய நிலைமையில் தமிழகத்தில் 40 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதி செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள 60 வயது நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மதுரை மெடிக்கல் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவருடைய உடல்நிலை கண்காணிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதேபோல் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது நபர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#UPDATE: 60Yr M from Rajapalayam, Virudhnagar tested positive, admitted in madurai medical college. Pt is in isolation & is stable @MoHFW_INDIA @CMOTamilNadu @Vijayabaskarofl
— National Health Mission - Tamil Nadu (@NHM_TN) March 28, 2020
#CoronaUpdate: #Covid_19 positive confirmed for 25 Y M from West Mambalam, Chennai. Pt is undergoing treatment in isolation at a Private Hospital. His condition is stable @MoHFW_INDIA @CMOTamilNadu #TNHealth #Vijayabaskar
— National Health Mission - Tamil Nadu (@NHM_TN) March 28, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments