டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய மேலும் இருவருக்கு கொரோனா!

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், கொரோனா தொற்று உறுதியாகியுள்ள 2 பேரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்களில் நேற்று முன் தினம் 45 பேர்களுக்கும், நேற்று 110 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட இன்று மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது.

More News

வைரஸ் என்றால் என்ன??? கொரோனா வைரஸ் எப்படி உடலில் நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது???

வைரஸ்களால் தனியாக வாழவோ அல்லது வளர்ச்சி சிதை மாற்றங்களைச் செய்யவோ முடியாது. எப்பொழுதும் உடலில் உள்ள ஓம்புயிரி செல்களையே வைரஸ்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.

தனிமைப்படுத்தப்பட்டார் 'நேர் கொண்ட பார்வை' நடிகை

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஷராதா ஸ்ரீநாத் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு சில நாட்கள் முன்பு வரை சென்னை, பெங்களூரு உள்பட ஒருசில நகரங்களுக்கு படப்பிடிப்புக்காக

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது!!! உலக நாடுகளில் தாக்கம் எவ்வளவு???

ஐ.நா. சபையின் தலைவர் ஆண்டோனியோ குட்டரஸ் ஐ.நா சபை தோன்றியதில் இருந்து சந்திக்கும் முதல் மிகப்பெரிய சவால் கொரோனா வைரஸ் என நேற்றுக் குறிப்பிட்டு இருந்தார்.

ரஷ்ய அதிபர் புதினுக்கு கொரோனாவா? அதிர்ச்சி தகவல்

ஏழை முதல் பணக்காரர் வரை பாமரர் முதல் பதவியில் இருப்பவர்கள் வரை பாகுபாடின்றி பரவி வரும் கொரோனா வைரஸ், ஏற்கனவே பிரிட்டன் பிரதமர் உள்பட பல விவிஐபிக்களை தாக்கியுள்ள

1000 பால் பாக்கெட்டுக்கள், 250 குடும்பங்களுக்கு காய்கறிகள்: அசத்தும் விஜய் ரசிகர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு திண்டாடி வருகின்றனர்