தலைமறைவான சூர்யாதேவி மீது மேலும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கடந்த சில வாரங்களாக கொரோனா பரபரப்பையும் மீறி வனிதா விஜயகுமார்-பீட்டர் பால் திருமணம் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியானது என்பதும் இந்த திருமணத்தை கடுமையாக விமர்சனம் செய்து சூர்யா தேவி என்ற பெண் யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சூர்யா தேவி மீது வடபழனி காவல் நிலையத்தில் நடிகை வனிதா விஜயகுமார் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சூர்யா தேவியை விசாரணை செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அதன் பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டதும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் தெரிந்த சூர்யாதேவி தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில் கொரோனாவை பரப்பும் வகையில் சூர்யா தேவி செயல்படுவதாக அவர் மீது மேலும் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரி ரமேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலும் தலைமறைவாக சூர்யாதேவி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னைக்கு ரூ.18 கோடி, திருத்தணிக்கு ரூ.109 கோடி: அடுக்கடுக்காக திட்டங்களைச் செயல்படுத்தும் தமிழக முதல்வர்!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரூ.18.24 மதிப்பிலான சுகாதார மையக் கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்திருக்கிறார்.

பாலிவுட் குறித்த ஏ.ஆர்.ரஹ்மானின் குற்றச்சாட்டு: ஆதரவு அளித்த தமிழக அமைச்சர்!

பாலிவுட் திரையுலகில் வாரிசுதாரர்களின் ஆதிக்கம் அதிகம் என்றும், புதியவர்கள் பாலிவுட்டில் நுழைந்தால் அவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புவதாகவும்

அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம்: தமிழ் ஹீரோ சிக்கியதால் பரபரப்பு

அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் நடத்தியதை அடுத்து தமிழ் திரைப்பட ஹீரோ ஷாம் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

117 வயதில் வருமான வரி செலுத்தும் மூதாட்டி: நெகிழ்ந்துபோன வருவமானத்துறை அதிகாரிகள்!!!

வருமான வரித்துறையின் 160 ஆவது ஆண்டைக் கொண்டாடிய அதிகாரிகள் இந்தியாவில் அதிக வயதுடன் வருமான வரிசெலுத்தும் நபர்களை கௌரவித்து உள்ளனர்.

எனக்கும் அநியாயம் நடந்துள்ளது: ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து தமன்னா குற்றச்சாட்டு!

பாலிவுட் படங்களில் இசை அமைக்க கிடைத்த வாய்ப்புகளை ஒருசில கும்பல் தடுத்ததாக இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் சமீபத்தில் பேட்டியளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.