கமல் கட்சி நிர்வாகிகளுக்கு 2 மினி பேருந்து போதும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
- IndiaGlitz, [Friday,March 22 2019]
கடந்த சில மாதங்களாக கமல் கட்சியை கிண்டலாக விமர்சனம் செய்து அதிமுக அமைச்சர்கள் சீண்டுவதும் அதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுப்பதும் வழக்கமாக நடைபெற்று வரும் சம்பவங்களாக உள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, 'கமல் கட்சி வரும் தேர்தலுடன் அடையாளம் தெரியாமல் போகும். அவருடைய கட்சியில் யார் இருக்கின்றார்கள்? அவர் கட்சியின் நிர்வாகிகளுக்கு இரண்டு மினி பஸ் போதும்.
கமல் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களை ஏற்றிக்கொண்டு செல்ல இரண்டு மினி பஸ் போதும் என்றும் அவர்களை ஆந்திராவுக்கு ஏற்றிக்கொண்டு போய் கொஞ்ச நாள் இருங்கள் என்று சொல்ல போகிறோம்' என்றும் அமைச்சர் கிண்டலாக கூறினார். அமைச்சரின் இந்த கிண்டலுக்கு கமல்ஹாசனின் பதில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.