மலக்குடலில் வைத்து தங்கம் கடத்தல்… பிடிபட்டது எப்படி?
- IndiaGlitz, [Saturday,January 22 2022]
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஆசனவாய் வழியாக மைலக்குடலில் வைத்து தங்கப்பசை கடத்திய இருவர் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
டெல்லியிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு கடந்த செவ்வாய்கிழமை வந்த இருவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது சந்தேகமடைந்துள்ளனர். இதையடுத்து இருவரிடமும் விசாரணை நடத்திய சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் ஸ்கேனிங் சோதனை நடத்தியுள்ளனர். இதனால் அவர்கள் ஆசனவாய் மூலம் மலக்குடலில் தங்கம் கடத்திவந்தது தெரியவந்துள்ளது.
துபாயில் இருந்து ஃபிளைடுபாய் விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு வந்த இவர்கள் டெல்லியில் தரையிறங்கி பின்னர் மீண்டும் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் தலா 430 கிராம் தங்கப் பசையை தங்களது மலக்குடலில் வைத்திருந்ததாகவும் ஒட்டுமொத்தமாக 866 கிராம் கொண்ட தங்கத்தின் மதிப்பு 41.6 லட்சம் என்றும் கூறப்படுகிறது. இதனால் தங்கம் கடத்திய இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதேபோல கடந்த வாரம் பெங்களூரு விமானம் நிலையம் வந்தடைந்த சூடான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மலக்குடலில் வைத்து தங்கம் கடத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.