'ஏகே 62' படத்திற்கு இரண்டு இயக்குனர்களா? வேற லெவல் திரைக்கதை என தகவல்

  • IndiaGlitz, [Sunday,February 05 2023]

அஜித் நடிக்க உள்ள ’ஏகே 6’ திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் தற்போது அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’ஏகே 62’ திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்குவார் என்றும் இது குறித்த முறையான அறிவிப்பு லைகா நிறுவனத்திடம் இருந்து விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி இந்த படத்தின் திரைக்கதையை பிரபல இயக்குனர் பிஎஸ் மித்ரன் எழுத விருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்த படத்தின் திரைக்கதை வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு சூப்பர் ஹிட் இயக்குனர்கள் ’ஏகே 62’ படத்தின் இணைவதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ‘ஏகே 62’ படத்தில் மகிழ்திருமேனி, பிஎஸ் மித்ரன் ஆகிய இருவரும் பணிபுரிவார்களா? என்பதை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

More News

தைப்பூச நாளில் ரவீந்திரன் - மகாலட்சுமி முருகனிடம் வேண்டியது என்ன? வைரல் புகைப்படங்கள்..!

 பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன், சீரியல் நடிகை மகாலட்சுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் என்பதும் சமீபத்தில் நடந்த திருமணங்களிலேயே இந்த திருமணம் தான் சமூக

ஷாலினி அஜித் எடுத்த மாஸ் புகைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி..!

 ஷாலினி அஜீத் எடுத்த அஜித்தின் மாஸ் புகைப்படங்கள் ஷாலினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

ஜாதி பெருமை பேசிய போஸ்கி.. இயக்குனர் போட்ட டுவிட்..!

நடிகர் போஸ்கி சமீபத்தில் நடந்த விழாவில் ஜாதி பெருமை குறித்து பேசிய நிலையில் அதற்கு தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் தனது ட்விட்டரில் பதில் கூறியுள்ளார். 

வெற்றி மாறனின் அடுத்த படம்.. இரண்டு பிரபல ஹீரோக்கள், இரண்டு பாகங்கள்?

 வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' என்ற திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி முடித்துள்ள நிலையில் அடுத்ததாக சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' திரைப்படத்தை இயக்க உள்ளார்.

லியோ.. விஜய்க்கு மட்டுமல்ல, இவருக்கும் 67வது படம் தான்: ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் நடித்து வரும் 67வது திரைப்படமான 'லியோ' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில்