கமல்ஹாசனின் 'தக்ஃலைப்' படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்:ராஜ்கமல் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தக்ஃலைப்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே சில பிரபலங்கள் இணைந்தனர் என்பதை பார்த்தோம்.
கமல்ஹாசனுடன் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்த நிலையில் தற்போது மேலும் 2 நடிகர்கள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தமிழ் திரை உலகின் இளம் நடிகர் கௌதம் கார்த்திக் இணைந்துள்ளதை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
மேலும் பிரபல மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் அவர்களும் இந்த படத்தில் இணைந்து உள்ளார். இவர்கள் இருவரும் இந்த படத்தில் இணைந்துள்தை அடுத்து இந்த படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். பான் இந்திய திரைப்படமாகவும் மல்டி ஸ்டார் படமாகவும் உருவாக இருக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Welcome onboard #JojuGeorge & @Gautham_Karthik to the magnificent ensemble of #ThugLife
— Raaj Kamal Films International (@RKFI) January 10, 2024
#Thuglife #Ulaganayagan #KamalHaasan @ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @actor_jayamravi @trishtrashers @dulQuer @abhiramiact #Nasser @MShenbagamoort3 @RKFI… pic.twitter.com/Vcs4S0b8PG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments