தனுஷின் அடுத்த படத்தில் இணையும் 4 பிரபலங்கள்.. வேற லெவலில் இருக்கும் போல..!

  • IndiaGlitz, [Tuesday,July 25 2023]

தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் 4 பிரபலங்கள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் தற்போது ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இதனை அடுத்து அவர் நடித்து இயக்கும் 'D50’ படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ஒன்று குறித்த தகவல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் 4 பிரபலங்கள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா என்றும் இன்னொருவர் ராஷ்மிகா மந்தனா என்றும் கூறப்படுகிறது. தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் நாகார்ஜுனா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் சாய்பல்லவியும் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்த படத்திற்கு வேற லெவலில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.