கமல்ஹாசன் - மணிரத்னம் படத்தில் இந்த 2 பிரபல ஹீரோக்களா? வேற லெவல் தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,September 12 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’கமல் 233’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கமல் 234’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு செய்வதில் மணிரத்னம் பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது மேலும் இரண்டு முன்னணி ஹீரோக்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் ஜெயம் ரவி, இன்னொருவர் துல்கர் சல்மான் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையானால் இருவரும் முதல் முதலாக கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்கப் போவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். ‘கமல் 233’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கமல்ஹாசன் - எச் வினோத் படத்தில் 2 பிரபல ஹீரோக்கள்.. கதை என்ன?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று

இதையெல்லாம் மறந்து விட்டு பேச வேண்டாம்.. ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் ஆவேச பதிவு..!

இசைப்புயல் ஏஆர் ரகுமான் சமீபத்தில் சென்னையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற இசை நிகழ்ச்சியை நடத்திய நிலையில் அந்த நிகழ்ச்சியை நடத்திய ஒருங்கிணைப்பாளர்களின்  சொதப்பல் காரணமாக ஏஆர் ரஹ்மானுக்கு

ரஜினியை சந்தித்த மலேசிய பிரதமர்.. 'சிவாஜி' ஸ்டைலில் நடித்து காட்டிய வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்கள் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

'புஷ்பா 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. 'இந்தியன் 2' படத்திற்கு சிக்கலா?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம்  சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில்

அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு அக்டோபரில் இல்லை.. லேட்டஸ்ட் தகவல்..!

அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என்று  கூறப்பட்ட நிலையில் தற்போது அதற்கு முன்பே தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.