ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் படத்தில் 2 பிரபலங்கள்.. பான் - இந்திய திரைப்படமாக மாறுகிறதா?

  • IndiaGlitz, [Thursday,November 16 2023]

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் 23 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் நாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது

ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் இந்திய சினிமாவில் பிரம்மாண்டமான புதுமையான கதைக்களம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அது மட்டுமின்றி துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை பான் இந்திய திரைப்படமாக்க இன்னும் சில பிரபலங்கள் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.