'விடாமுயற்சி' படத்தில் இணையும் 'லியோ'வின் இரண்டு மாஸ் நடிகர்கள்.. அஜித் ரசிகர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Tuesday,September 12 2023]

அஜித் நடிக்கவுள்ள ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அபுதாபியில் தொடங்க இருப்பதாகவும் தற்போது படக்குழுவினர் அங்கு படப்பிடிப்புக்கு தேவையான பணிகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை

குறிப்பாக இந்த படத்தை நாயகி த்ரிஷா என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மேற்கண்ட இருவரும் விஜய்யின் ’லியோ’ திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பாக ஆக்ஷன் கிங் அர்ஜுன், அஜித் உடன் ஏற்கனவே ’மங்காத்தா’ படத்தில் இணைந்து நடித்து அசத்தியிருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருப்பதாகவும் ஒரு சில காட்சிகள் மட்டும் சென்னை மற்றும் வட இந்தியாவில் படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

'ஜிகர்தண்டா' முதல் பாகத்தை மிஸ் செய்துவிட்டேன்: ராகவா லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே. சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் நேற்று வெளியானது

கமல்ஹாசன் - மணிரத்னம் படத்தில் இந்த 2 பிரபல ஹீரோக்களா? வேற லெவல் தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'கமல் 233' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் '

கமல்ஹாசன் - எச் வினோத் படத்தில் 2 பிரபல ஹீரோக்கள்.. கதை என்ன?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று

இதையெல்லாம் மறந்து விட்டு பேச வேண்டாம்.. ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் ஆவேச பதிவு..!

இசைப்புயல் ஏஆர் ரகுமான் சமீபத்தில் சென்னையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற இசை நிகழ்ச்சியை நடத்திய நிலையில் அந்த நிகழ்ச்சியை நடத்திய ஒருங்கிணைப்பாளர்களின்  சொதப்பல் காரணமாக ஏஆர் ரஹ்மானுக்கு

ரஜினியை சந்தித்த மலேசிய பிரதமர்.. 'சிவாஜி' ஸ்டைலில் நடித்து காட்டிய வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்கள் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.