இரட்டை இலை முடக்கம். ஓபிஎஸ்-டிடிவி தினகரன் கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒன்றுபட்ட அதிமுகவின் மக்கள் செல்வாக்கு மிகுந்த சின்னமான இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக நேற்று நள்ளிரவு தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது. இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்த இரு அதிமுக அணிகளுக்கும் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதுகுறித்து ஓபிஎஸ் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு புரட்சித்தலைவர் உருவாக்கிய, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொடர் வெற்றிச் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது என்ற உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வலுவான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்தும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்காமல் போனது மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னத்தை சட்டப்படி எப்படுபட்டாவது மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் கட்சியையும், ஆட்சியையும் இஅர்ட்டை இலை சின்னத்தையும் தமிழ்மக்களும், அனைத்திந்ஹிய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களும் மகிழும் வண்ணம் உறுதியாக மீட்டெடுப்போம்
இதே போல் தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி அறிவிப்பு குறித்து டிடிவி தினகரன் கூறியதாவது:
இரட்டை இலைச்சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது, நிச்சயம் அதனை மீட்டெடுப்போம் எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதா மீட்டெடுத்ததுப்போல் கட்சியையும் சின்னத்தையும் மீட்போம். இரட்டை இலை முடக்கம் அதிர்ச்சி அல்ல, அனுபவம் தான் சின்னம் முடக்கப்பட்டிருப்பது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது.
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியிருப்பது பின்னடைவு அல்ல. ஏற்கனவே இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டது. அதை மீட்டெடுத்த அனுபவம் எங்களுக்கு உள்ளது. ஆர்கே.நகர் வேட்பாளர் நான் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை. இடைத்தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments