close
Choose your channels

ஒரே புகைப்படத்தில் இரண்டு லேடி சூப்பர் ஸ்டார்.. விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படம்..!

Wednesday, September 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படத்தில் இரண்டு லேடி சூப்பர் ஸ்டார் நடிகைகள் இருக்கும் நிலைகள் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

தமிழ் திரை உலகப் பொருத்தவரை நடிகை நயன்தாரா தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் ஏற்றுக் கொண்ட நிலையில் மலையாள திரையுலகில் மஞ்சுவாரியரை லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். தற்போது அவர் தமிழிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக விரைவில் வெளியாக உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’வேட்டையன்’ திரைப்படத்தில் மஞ்சு வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் மஞ்சு வாரியர் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது மனைவி நயன்தாரா, மஞ்சுவாரியரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து உள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு பல்வேறு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. குறிப்பாக ஒரே புகைப்படத்தில் இரண்டு லேடி சூப்பர் ஸ்டார் இருப்பதாக நெட்டிசன்கள் பதிவு செய்ததை அடுத்து இந்த கமெண்ட் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment