ரஜினியின் 'கபாலி'யில் இணையும் சர்வதேச நடிகர்கள்

  • IndiaGlitz, [Tuesday,January 05 2016]

அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தில் வில்லன் வேடத்தில் ஹாலிவுட் நடிகர் ஜெட்லி நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை 'கபாலி' படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மறுத்ததை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தற்போது மீண்டும் வெளிநாட்டு நடிகர்கள் இருவர் கபாலி படத்தின் வில்லன் கேரக்டர்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.


பிரபல தைவான் நாட்டு நடிகர் WinstonChao மற்றும் மலேசிய நடிகர் Rosyam Nor ஆகிய இருவரும் 'கபாலி' படத்தில் ரஜினியின் வில்லன்களாக நடிக்கவுள்ளதாகவும் இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேற்கண்ட இருவருமே மலேசியா மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளில் பிரபலமானவர்கள் என்பதால் 'கபாலி' திரைப்படம் அந்த நாடுகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

More News

'இன்று நேற்று நாளை' இயக்குனர் படத்தில் சிவகார்த்திகேயன்

கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் விஷ்ணு, மியார் ஜார்ஜ் மற்றும் சிறப்பு தோற்றத்தில் ஆர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய 'இன்று நேற்று நாளை'...

கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' குறித்த முக்கிய அறிவிப்பு

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய இரண்டே படத்தின் வெற்றியின் மூலம் ரஜினி, விஜய் படங்களை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில்...

அஜித்துக்கு ரசிகராக மாறிய பிரபல மலையாள நடிகர்

தல அஜித்தின் பெயர் மற்றும் படக்காட்சிகளை தங்கள் படங்களில் பயன்படுத்தி புரமோஷன் செய்யும் கோலிவுட் நடிகர்கள் பலரை நாம் பார்த்துள்ளோம்....

ஜெயம் ரவியின் 'மிருதன்' ரிலீஸ் தேதி?

கடந்த 2015ஆம் ஆண்டில் நான்கு வெற்றி படங்களை கொடுத்த ஜெயம் ரவியின் அடுத்த படமான 'மிருதன்' தமிழில் வெளிவரும் முதல் 'ஜோம்பி' படம் என்று...

பொங்கலுக்கு உதயநிதி தரும் டபுள் ட்ரீட்

உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்சன் நடித்த 'கெத்து' படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது...