நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இரண்டு இடங்களில் நடந்த 'சர்கார்' பட காட்சிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் இன்று காலை முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்த நிலையில் ‘சர்கார்’ படத்தில் இடம் பெற்றது போல இரண்டு காட்சிகள் தமிழகத்தின் இரண்டு இடங்களில் அரங்கேற்றி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நாகராஜன் என்பவர் தனது வாக்கை பதிவு செய்ய வந்தபோது அவருடைய வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டது என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை அடுத்து அவர் தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதை அடுத்து அவர் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கொடுத்த படிவத்தை பூர்த்தி செய்து சேலஞ்ச் ஓட்டு போட்டார். விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் விஜய்யின் ஓட்டை வேறொருவர் போட்டுவிட அதற்காக அவர் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து அதன் பிறகு அவர் தனது ஓட்டை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக ‘சர்கார்’ விஜய் போல் அமெரிக்காவிலிருந்து வந்த நபர் ஒருவர் வாக்களித்துள்ளார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இம்தியாஸ் ஷெரீப் என்பவர் அமெரிக்காவிலிருந்து வந்து உள்ளாட்சி தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
‘சர்கார்’ படத்தில் இடம்பெற்ற இரண்டு காட்சிகள் இன்றைய தேர்தலின்போது நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com