close
Choose your channels

சல்மான்கான் - ஏஆர் முருகதாஸ் படத்தில் 2 ஹீரோயின்கள்.. 3 வில்லன்கள்.. மாஸ் தகவல்..!

Thursday, June 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்கே 23’படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில் உருவாக இருக்கும் ’சிக்கந்தர்’ என்ற படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் மற்றும் 3 வில்லன்கள் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சல்மான் கான் மற்றும் கரீனா கபூர் ஆகிய இருவரும் ‘தபாங் 2’ உட்பட சில படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தில் மூன்று மாஸ் வில்லன்கள் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒருவர் தமிழ் நடிகர் என்றும் மற்ற இருவர் பாலிவுட் நடிகர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு ரம்ஜான் தினத்தில் இந்த படம் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment