தேர்வில் தோல்வி அடைந்ததால் கொள்ளையர்களாக மாறிய இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள்: அதிர்ச்சி தகவல் 

  • IndiaGlitz, [Sunday,August 23 2020]

தேர்வில் தோல்வி அடைந்ததால் மனம் வெறுத்து கொள்ளையர்களாக மாறிய இரண்டு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள காசியாபாத் என்ற நகரில் ஒரு இன்டர்நெட் மையத்தில் இரண்டு மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்தனர். அவர்கள் கொள்ளையடித்த பணம் ரூபாய் 1.25 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்கள் இருவரையும் கண்டுபிடித்தனர். அப்போதுதான் அவர்கள் இருவரும் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் என்பதும் சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் அவர்கள் தோல்வி அடைந்ததால் மனம் வெறுத்து கொள்ளையர்களாக மாறி விட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கல்லூரித் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனம் வெறுத்து கொள்ளையர்களாக மாறிய எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

பிரபல இயக்குனர் மகன் இயக்கும் முதல் படத்தில் விஜய்சேதுபதி-டாப்ஸி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ராஜாதி ராஜா' விஜயகாந்த் நடித்த 'அம்மன் கோயில் கிழக்காலே' உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சுந்தரராஜன்

இளம் நடிகருக்கு அத்தையாக நடிக்கும் விஜய்-அஜித் ஹீரோயின்!

பொதுவாக திரையுலகில் நடிகர்கள் எவ்வளவு வயதானாலும் ஹீரோவாகவே நடிப்பார்கள். ஆனால் அதே ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைகள், அக்கா அம்மா அத்தை

ஒரு சண்டை கூட போடவில்லை: விவாகரத்துக்கு மனைவி கூறிய அதிர்ச்சி காரணம்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருமணமான 18 மாதங்களில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அற்புதமான கூட்டணி: உதயநிதிக்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகர்!

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'சைக்கோ' திரைப்படம் இந்த ஆண்டு வெளிவந்த நிலையில் தற்போது அவர் 'கண்ணை நம்பாதே' 'ஏஞ்சல்' ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்

திரைப்பட படப்பிடிப்பு குறித்து மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு: திரையுலகினர் குஷி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.