இந்த வாரம் சனி, ஞாயிறு என இரண்டு எவிக்சனா? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒரு எலிமினேஷன் இருக்கும் என்ற நிலையில் இந்த வாரம் மட்டும் திடீரென மிட்வீக் எலிமினேஷன் என அனன்யா வெளியேற்றப்பட்டார்.
இதனை அடுத்து இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படுவது கூல் சுரேஷ் என்று தகவல் தெரிந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி கூல் சுரேஷ் இன்றே வெளியேறுகிறார் என்றும் கூறப்படுகிறது. அப்படி என்றால் நாளை இன்னொரு போட்டியாளர் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
நாமினேஷன் செய்யப்பட்ட ஆறு பேர்களில் அனன்யா ஏற்கனவே எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் இன்று கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்டு விட்டால் அர்ச்சனா தவிர மீதம் உள்ள நிக்சன், தினேஷ் மற்றும் விஷ்ணு ஆகிய மூவரில் ஒருவர் நாளை எலிமினேஷன் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக நிக்சன் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மொத்தமே 100 நாள் என்ற நிலையில் தற்போது 75 நாட்களை தாண்டிவிட்ட நிலையில் 11 போட்டியாளர்கள் இருப்பதால் இனி வரும் வாரங்களில் எலிமினேஷன் எண்ணிக்கையும் அதிகரிக்கும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com