வயதோ 105, ஆனாலும் படித்து ஜனாதிபதியிடம் விருது வாங்கும் கேரளா பாட்டிமார்கள்..!

  • IndiaGlitz, [Thursday,March 05 2020]

கேரளாவில், பத்து வயதிலேயே படிப்பு நிறுத்தப்பட பாகீரதி அம்மாள் எனும் மூதாட்டி தனது 105 வது வயதில் படிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு தனது 4ம் வகுப்பு தேர்வை 70 சதவிகித மதிப்பெண்ணோடு நிறைவு செய்துள்ளார். இதன மூலம் கேரளாவின் எழுத்தறிவு மிஷனின் வகுப்புக்களில் அதிக வயதில் தேர்ச்சி பெற்றவர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

அதே போல் கேராளவைச் சேர்ந்த கார்த்தியானி எனும் மூதாட்டி தனது 96 வயதில் பள்ளி படிப்பில் நூற்றுக்கு 98 மதிப்பெண்கள் பெற்று ஆச்சரியப்படுத்தினார். கடந்த மாதம் 23ம் தேதி மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி அவர்கள் பாகீரதி அம்மாளின் படிப்பு ஆர்வத்தைப் பாராட்டி பேசினார்.

இந்த இரு மூதாட்டிகளும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் விருது பெற இருக்கின்றனர். மார்ச் 8 ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு நடக்கும் நிகழ்ச்சியில் ‘நரி சக்தி புராஸ்கர் 2019’ விருதினை இருவரும் கூட்டாக பெற இருக்கின்றனர்.