விஜய் தேவரகொண்டாவை பார்த்ததும் கதறியழுத பெண் டாக்டர்கள்: என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை பார்த்ததும் இரண்டு பெண் டாக்டர்கள் கதறி அழுத சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. சின்னத்திரை சீரியலில் தனது பயணத்தை தொடங்கி அதன் பிறகு பெரிய திரையில் அறிமுகமானார். அவரது படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதை அடுத்து தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அவர் ’குஷி’, ’லைகர்’ மற்றும் ’ஜன கன மன ‘ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் ’லைகர்’ படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடந்து கொண்டிருந்தபோது அவரை சந்திப்பதற்காக இரண்டு ரசிகைகள் வந்தனர். அவர்களை வரவேற்ற விஜய் தேவர்கொண்டாவிடம் அந்த இரு ரசிகைகளும் தங்களை டாக்டர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
மேலும் தாங்கள் விஜய் தேவர்கொண்டாவின் தீவிர ரசிகைகள் என்று இருவரும் கூறிய நிலையில் அவர்களில் ஒருவர் தனது முதுகில் விஜய்தேவரகொண்டாவின் ‘லைகர்’ டாட்டூ வரைந்து இருப்பதையும் அவர் காட்டியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இருவரையும் கட்டியணைத்து விஜய் தேவரகொண்டா போஸ் கொடுத்தபோது இருவருமே ஆனந்த கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Fan Girl Moment of The #Liger @TheDeverakonda ?? #LIGER ??#LigerOnAug25th ??#VijayDeverakonda ❤️ pic.twitter.com/Pjlu5lsv0K
— VijayDeverakonda?? Fan (@MSiva02339367) June 30, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments