அடுத்தடுத்த நாட்களில் இரண்டு திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்: அதிர்ச்சியில் தொண்டர்கள்

  • IndiaGlitz, [Friday,February 28 2020]

திருவொற்றியூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் கேபிபி சாமி அவர்கள் நேற்று உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த செய்தி திமுக தொண்டர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது. திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கேபிபி சாமி அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கேபிபி சாமி அவர்களின் மறைவின் சோகத்திலிருந்து இன்னும் திமுக தொண்டர்கள் மீளாத நிலையில், சற்று முன்னர் வெளிவந்த தகவலின்படி குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் அவர்கள் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்திகள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. குறிப்பாக திமுக தொண்டர்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ காத்தவராயன் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் தான் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார் என்பதும் பதவியேற்ற ஒன்பது மாதங்களில் அவர் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த நாட்களில் இரண்டு திமுக எம்எல்ஏக்கள் உடல்நலக்குறைவால் காலமாகி இருப்பது திமுக தலைவர் மற்றும் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் குடியாத்தம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் விரைவில் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

'கைதி' இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியான திரைப்படம் 'கைதி'. இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று தயாரிப்பாளர்

'இந்தியன் 2' விபத்து, ஷங்கரின் முக்கிய அறிவிப்பு

கமல்ஹாசன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட த்ரிஷா படத்தயாரிப்பாளர்

த்ரிஷா நடிப்பில் திருஞானம் இயக்கிய 'பரமபதம் விளையாட்டு' திரைப்படம் நீண்ட கால தாமதத்திற்குப் பின்னர் வரும் 28ஆம் தேதி அதாவது நாளை வெளியாக இருந்தது.

கள்ளக்காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது!

கள்ளக்காதலியை சந்திப்பதற்காக மாங்காய் குடோனில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கலவரத்தை தூண்டியவர்களை கைது செய்ய சொல்லிய நீதிபதியை உடனடி இடமாற்றம் செய்த மத்திய அரசு..!

டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரை பஞ்சாப்- ஹரியானா நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் குடியரசுத் தலைவர்.