அணி மாறும் எம்பிக்கள்; காலியாகிறது தினகரன் கூடாரம்

  • IndiaGlitz, [Monday,November 27 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, தினகரன் அணி, தீபா அணி என சுக்குநூறாக நொறுங்கிய நிலையில் தற்போது ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்த அதிமுகவாக உருவாகியுள்ளது. இந்த அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததோடு, இரட்டை இலை சின்னத்தையும் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் இதுநாள் வரை தினகரன் அணியில் இருந்தவர் இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் விரக்தி அடைந்து தற்போது அணி மாற தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக தினகரன் ஆதரவு எம்பி நவநீதகிருஷ்ணன், முதலமைச்சர் பழனிசாமி இல்லத்திற்கு வருகை தருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் இன்னொரு தினகரன் ஆதரவு எம்பி விஜிலா சத்தியானந்த் அவர்களும் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தினகரனை ஆதரித்ததால் தகுதியிழந்து இருக்கும் 18 எம்.எல்.ஏக்கள் உள்பட அந்த அணியில் உள்ள அனைவருமே பலர், அதிமுகவிற்கு விரைவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தினகரன் கூடாரம் விரைவில் காலியாகிவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

More News

மூன்றாம் உலக போரை உருவாக்க கூடிய எந்திர மனிதன் இவனா?

ரோபோ என்பது மனிதனால் தயாரிக்கப்பட்டாலும், நாளடைவில் மனிதனை விஞ்சும் அளவுக்கு திறமை படைத்ததாகவும், மனிதனையே அழிக்கும் திறமை படைத்ததாகவும் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழுவின் அவசர செய்தி

சமீபத்தில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் வெற்றிநடை போட்டு வருகிறது

சிம்புவின் இமேஜை உச்சத்திற்கு கொண்டு சென்ற 'தொட்றா'

சிம்பு என்றாலே சர்ச்சையும் சண்டையும் தான் என்பது கோலிவுட் திரையுலகினர்களின் பார்வை. இப்போதுகூட அவர் மணிரத்னம் படத்தில் இருக்கின்றாரா? இல்லையா? என்ற குழப்பம் கோலிவுட் திரையுலகினர்களிடையே உள்ளது.

ஐபோன், ஐபேடை விட முக்கியமானது இது: 'தீரன்' விழாவில் கார்த்தி பேச்சு

கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் எதிர்பார்த்ததைவிட அதிக வசூலையும் பாராட்டையும் பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் சென்னையில் நடந்தது

இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவ கல்லூரி மாணவி இவர்தான்

மூன்றாம் பாலினத்தவர்களாகிய திருநங்கைகள் தற்போது ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வரும் நிலையில் இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவக்கல்லூரி மாணவி என்ற பெருமையை