அணி மாறும் எம்பிக்கள்; காலியாகிறது தினகரன் கூடாரம்
- IndiaGlitz, [Monday,November 27 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, தினகரன் அணி, தீபா அணி என சுக்குநூறாக நொறுங்கிய நிலையில் தற்போது ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்த அதிமுகவாக உருவாகியுள்ளது. இந்த அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததோடு, இரட்டை இலை சின்னத்தையும் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் இதுநாள் வரை தினகரன் அணியில் இருந்தவர் இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் விரக்தி அடைந்து தற்போது அணி மாற தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக தினகரன் ஆதரவு எம்பி நவநீதகிருஷ்ணன், முதலமைச்சர் பழனிசாமி இல்லத்திற்கு வருகை தருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் இன்னொரு தினகரன் ஆதரவு எம்பி விஜிலா சத்தியானந்த் அவர்களும் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே தினகரனை ஆதரித்ததால் தகுதியிழந்து இருக்கும் 18 எம்.எல்.ஏக்கள் உள்பட அந்த அணியில் உள்ள அனைவருமே பலர், அதிமுகவிற்கு விரைவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தினகரன் கூடாரம் விரைவில் காலியாகிவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.