புதிய 500 ரூபாய் நோட்டில் பிரிண்டிங் மிஸ்டேக்
- IndiaGlitz, [Friday,November 25 2016]
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்களுக்கு பதிலாக புதிய ரூ.2000 நோட்டை ஏற்கன்வே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நிலையில் தற்போது புதிய ரூ.500 நோட்டு ஒருசில நகரங்களில் வெளிவந்துள்ளது. இன்னும் இந்த நோட்டு பல நகரங்களுக்கு வரவில்லை. இருப்பினும் இதில் இரண்டு விதமான ரூ.500 நோட்டுக்கள் வந்திருப்பதாக முன்னணி ஆங்கில பத்திரிகை ஒன்று படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவத்தின் நிழல் ஒருசில நோட்டுக்களில் தெரிவதாக அந்த பத்திரிகை படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒருசில நோட்டுகளில் எழுத்துகளின் அலைன்மென்ட் சீராக இல்லை என்றும் வேறு சில Shadeகளில் கூட புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகின்றது.
இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர் அல்பனா கில்லாவாலா செய்தியாளர்களிடம் கூறியபோது, 'அவசர அவசரமாக புதிய 500 ரூபாய் நோட்டுகள் தயார் செய்ததால், பிரின்ட்டிங் மிஸ்டேக் ஆகியிருக்கலாம் என்றும் என்றாலும் இரண்டு நோட்டுக்களும் செல்லும் என்றும் ஒருவேளை யாரும் வாங்க மறுத்தால் ரிசர்வ் வங்கியிடம் திரும்ப ஒப்படைக்கலாம் என்றும் கூறியுள்ளார்.