குஜராத்தில் அடுத்தடுத்த நாட்களில் இருவர் மரணம்: பெரும் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தில் 85 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சவுதி அரேபியாவில் இருந்து கடந்த 22ம் தேதி நாடு திரும்பிய இந்த மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அவருக்கு சோதனை செய்ததில் கொரோனா தாக்கியிருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஏற்கனவே குஜராத்தில் கொரோனா வைரசுக்கு ஒருவர் பலியாகி உள்ள நிலையில் இவரை சேர்த்து அந்த எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. இந்த நிலையில் இன்றும் குஜராத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குஜராத்தை சேர்ந்த 70 வயது ஆண் ஒருவர் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் அவர் உயிரிழந்ததாக குஜராத்திலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது, குஜராத் மாநிலத்தில் அடுத்தடுத்த நாட்களில் இரண்டு பேர் கொரோனா வைரசுக்கு பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments