ஒரே வாரத்தில் இரண்டு புயல்கள்: தாங்குமா சென்னை?

  • IndiaGlitz, [Wednesday,October 04 2017]

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குடிதண்ணீர் பிரச்சனை ஒருவழியாக தீர்ந்தது.

இந்த நிலையில் இந்த வார இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் வங்கக்கடலில் ஒரே வாரத்தில் இரண்டு புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

முதல் புயல் இம்மாதம் 11ஆம் தேதியும் 2வது புயல் இம்மாதம் 15 முதல் 20 ஆம் தேதிக்குள்ளும் அதாவது கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் இரண்டு புயல்கள் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,. 

இரண்டு புயல்களுமே கடலூர் மற்றும் நெல்லூர் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்ப்பதால் சென்னையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல்கள் சென்னைக்கு அதிக பாதிப்புகளை தரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More News

இன்று முதல் தொடங்குகிறது சுந்தர் சியின் 'கலகலப்பு 2'

சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடித்த 'கலகலப்பு' திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.

சத்யராஜின் சலிக்காத திரைப்படங்கள்

சத்யராஜின் சலிக்காத திரைப்படங்கள்

ரஜினி, கமல் மட்டும்தான் அரசியலுக்கு வரணுமா? நாங்களும் தயார்: சுஹாசினி

தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகினர்களின் ஆட்சி தான் நடந்து வருகிறது. அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய அனைவருமே திரையுலகில் சம்பந்தப்பட்டவர்கள்தான்.

ரசிகர்களுடன் கமல்ஹாசன் திடீர் ஆலோசனை: அரசியல் அறிவிப்பா?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே ஆவேசமான கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் தெரிவித்து வருகின்றார்.

சினிமாவை பின்னுக்கு தள்ளுமா வெப்சீரிஸ்: அக்சராஹாசன்

தொழில்நுட்ப பரிணாமத்தில் புதிய தொழில்நுட்பம் பழைய தொழில்நுட்பத்தை வீழ்த்தி வருவது சகஜமே. இந்த நிலையில் சினிமாவுக்கு இணையாக தற்போது தொலைக்காட்சி சீரியல்கள் புகழ் பெற்று வருகின்றன.