சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் தப்பிவிட்டதால் பரபரப்பு

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்றுவரை 309 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 102 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்திருப்பதாகவும் சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து ராயப்பேட்டை மருத்துவமனை மருத்துவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் தப்பி உள்ளதால் அவர்கள் மூலம் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு இருப்பதால் அந்த இருவரையும் கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக உள்ளனர்

More News

கொரோனா தடுப்பு நடவடிக்கை!!! தமிழ்நாட்டிலும் பயன்பாட்டுக்கு வந்த ரோபோக்கள்!!!

கோரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தன்மைக் கொண்டது. எனவே கொரோனா நோய்த்தொற்றை பரிசோதனை செய்வதற்கும்,

கொரோனாவால் கங்கை ஆரோக்கியமாக இருக்கிறது!!! மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பல தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன

தமிழகத்தில் இன்று மட்டும் 102 பேர் கொரோனாவால் பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 411

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒற்றை இலக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

கொரோனாவால் அமெரிக்காவில் 6.65 மில்லியன் மக்கள் வேலையிழப்பு!!! அரசின் நிவாரணத்தொகைக்கு விண்ணப்பம்!!!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நாடுகளின் பட்டியலில் தற்போது அமெரிக்கா முதல் இடத்தை பிடித்து இருக்கிறது

வேலையிழக்கும் 36 ஆயிரம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பணியாளர்கள்!!! மற்ற விமான நிறுவனங்களின் நிலைமை!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உலகம் முழுவதும் விமான சேவைகள் தடைசெய்யப்பட்டு இருக்கின்றன.