பிக்பாஸ் எவிக்சனில் திடீர் திருப்பம்.. இந்த வாரம் ஒன்றல்ல 2 போட்டியாளர்கள்..!
- IndiaGlitz, [Saturday,December 07 2024]
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் வார இறுதியில் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இந்த வாரம் தர்ஷிகா எலிமினேஷன் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில் தற்போது திடீர் திருப்பமாக தர்ஷிகா எலிமினேஷன் செய்யப்படவில்லை என்றும் 2 போட்டியாளர்கள் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இந்த வாரம் 12 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் அவர்களின் குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் என ஆர்ஜே. ஆனந்தி மற்றும் சாச்சனா ஆகிய இருவரும் எலிமினேஷன் செய்யப்பட்டதாக நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன. சாச்சனா ஏற்கனவே போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டு அதன் பின் மீண்டும் உள்ளே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிக் பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில் சாச்சனா மற்றும் ஆர்ஜே ஆனந்தி ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் 14 போட்டியாளர்கள் உள்ளனர். இன்னும் 40 நாட்களில் மீதியுள்ள நிலையில் இனி அடுத்தடுத்த வாரங்களிலும் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.