பிக்பாஸ் சீசன் 8: இந்த வாரமும் 2 எவிக்சனா? யார் யார் வெளியேற வாய்ப்பு..!
- IndiaGlitz, [Friday,December 20 2024]
கடந்த இரண்டு வாரங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்கள் எவிக்சன் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் எவிக்சன் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் முதலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 8 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்தனர். இதனை அடுத்து, 24 போட்டியாளர்களில் தற்போது 13 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், கடந்த வாரம் சத்யா மற்றும் தர்ஷிகா எவிக்சன் செய்யப்பட்டனர் என்பதும், அதற்கு முந்தைய வாரத்தில் ஆனந்தி மற்றும் சாச்சனா வெளியேற்றப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இன்னும் ஒரு மாதம் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில், இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய ஓட்டிங் நிலவரப்படி ரஞ்சித், ரயான், மஞ்சரி ஆகிய மூவரும் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளனர். இவர்களில் ரஞ்சித் எவிக்சன் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து, மஞ்சரி எவிக்சன் இரண்டாவது நபராக வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி நெருங்கி வருவதால், இனி வரும் வாரங்கள் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.