close
Choose your channels

ரஜினிகாந்த் வீட்டில் ஒரே நாளில் இரண்டு விசேஷங்கள்: தங்கத்தில் அபிஷேகம்..!

Monday, February 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் ஒரே நாளில் இரண்டு விசேஷங்கள் நடைபெற்றதை அடுத்து தங்கத்தில் அபிஷேகம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் சகோதரர் சத்திய நாராயண ராவ் அவர்களின் 80வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து தனது சகோதரருக்கு ரஜினிகாந்த் தங்கத்தில் அபிஷேகம் செய்யும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

மேலும் சத்திய நாராயணா அவர்களின் மகன் 60வது பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டதை அடுத்து இரண்டு விசேஷங்களும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: எனது சகோதரர் சத்திய நாராயண ராவ் அவர்களின் 80வது பிறந்தநாளையும் அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60-வது பிறந்தநாளையும் ஒரே நாளில் எனது குடும்பத்தினரும் கொண்ட மகிழ்ச்சியுடன் கொண்டாடினேன். என்னை இன்று ஆளாக்கிய இந்த தங்க இதயத்திற்கு தங்க மழை பொழிவதை நான் பாக்கியமாக உணர்ந்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தனது பெரியப்பா சத்தியநாராயண ராவ் மற்றும் தனது சகோதரர் ராமகிருஷ்ணா ஆகியோர்களின் 80வது மற்றும் 60வது பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சென்று வழிபட்டதாக ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment