close
Choose your channels

அக்டோபர் 9-ல் அனுஷ்காவின் இரண்டு படங்கள் ரிலீஸ்?

Sunday, September 27, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவரது அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அனுஷ்கா ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஒரே நாளில் அனுஷ்கா நடித்த இரண்டு படங்கள் வெளியாகவுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

'பாகுபலி' போலவே அனுஷ்கா நடித்த மற்றொரு சரித்திர திரைப்படமான 'ருத்ரம்மாதேவி' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டிருந்த நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என இந்த படத்தின் பி.ஆர்.ஓ அவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய விளம்பரங்கள் இன்று பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் நேற்று சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட்டும் பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தகக்து.

இந்நிலையில் இதே அக்டோபர் 9ஆம் தேதி அனுஷ்காவின் இன்னொரு படமான 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யா, அனுஷ்கா, ஊர்வசி, சோனால் செளகான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நாகார்ஜூனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக அனுஷ்கா தனது உடல் எடையை கூட்டியும் குறைத்தும் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் இரண்டு அனுஷ்கா படங்கள் வெளியாகவுள்ளதால் இரட்டை சந்தோஷத்தில் இருக்கும் அவரது ரசிகர்கள் இரண்டு படங்களையும் வெற்றி படங்களாக மாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment