விஜய்யின் 'பீஸ்ட்' உடன் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ்! அப்படி நடந்தால் என்ன ஆகும்?

  • IndiaGlitz, [Friday,January 21 2022]

தளபதி விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவ்வாறு வெளியானால் இரண்டு பெரிய படங்களின் மோதலை அந்தப்படம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பிரம்மாண்டமான திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது என்பதும், இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி ஏற்கனவே யாஷ் நடித்த ’கேஜிஎப் 2’ என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதே தினத்தில் அமீர்கான் நடித்த ’லால்சிங் சாதா’ என்ற திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

எனவே ஒரே நாளில் மூன்று பெரிய படங்கள் ரிலீசானால் என்ன நடக்கும் என்பது குறித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் ‘பீஸ்ட்’ படத்தின் வசூல் ’கேஜிஎப் 2’ ரிலீஸால் பாதிக்கும் என்றும், ’கேஜிஎப் 2’ படத்தின் வசூல் தமிழகம் மற்றும் கேரளாவில்‘பீஸ்ட்’ ரிலீஸால் பாதிக்கும் என்றும் ’கேஜிஎப் 2’ படத்தின் வசூல், ‘லால்சிங் சாதா’ ரிலீஸால் வட இந்திய மாநிலங்களில் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.