பெங்களூரில் நேருக்கு நேர் மோதிய 2 விமானங்கள்: விமானிகள் காயம்

  • IndiaGlitz, [Tuesday,February 19 2019]

பெங்களூரில் சர்வதேச விமானத் தொழில் கண்காட்சி நாளை தொடங்கி வரும் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் பல்வேறு சாகச காட்சிகள் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஒத்திகை இன்று நடைபெற்றது. இந்த ஒத்திகையில்  விமானப்படை வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஒரு சாகச நிகழ்ச்சியின் ஒத்திகைக்காக சூரிய கிரண் என்ற பிரிவை சேர்ந்த இரண்டு போர் விமானங்கள் பயிற்சி பெற்ற போது திடீரென எதிர்பாராத விதமாக இரண்டு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. மோதிய வேகத்தில் இரண்டு விமானங்களும் தரையில் மோதி தீப்பிடித்தன. இதனால் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. இதையடுத்து உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த விமானத்தின் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் இரண்டு விமானங்களின் விமானிகளும் காயம் அடைந்திருப்பதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த விமான விபத்தால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களில் 2 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

More News

அர்ஜூன் ரெட்டி ரீமேக்கில் இணைந்த தந்தையும் மகனும்!

சீயான் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கிய அர்ஜூன் ரெட்டி ரீமேக் படமான 'வர்மா' திரைப்படம் கைவிடப்பட்ட நிலையில் தற்போது புதிய டீமுடன் இந்த படத்தை மீண்டும் உருவாக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

அமேசான் போட்ட ஒரே ஒரு டுவீட்: ஆத்திரத்தில் அஜித் ரசிகர்க்ள்!

அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் சூப்பர்ஹிட்டாகி இன்னும் சென்னை உள்பட பல நகரங்களில் வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கின்றது.

ஒரு எம்.பி நிச்சயம்: பாமகவு கூட்டணி குறித்து நடிகை கஸ்தூரி கருத்து

அதிமுக கூட்டணியில் பாமக ஏழு மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிங்களையும் தொகுதியும் பெற்றுள்ளது என்பதை சற்றுமுன் பார்த்தோம். கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின் டாக்டர் ராமதாஸ்

அதிமுக கூட்டணியில் இணைந்தது பாமக!

அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைக்க சற்றுமுன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

நெட்டிசன்களின் ரியாக்சனுக்கு உடனடியாக மதிப்பு கொடுத்த செளந்தர்யா ரஜினிகாந்த்!

ரஜினியின் இளையமகள் செளந்தர்யாவுக்கு கடந்த வாரம் நடிகரும் தொழிலதிபருமான விசாகனுடன் திருமணம் நடைபெற்றது., இந்த திருமணத்திற்கு அரசியல்வாதிகள், திரையுலக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.