இன்று ஒரே நாளில் 2 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி எம்.எல்.ஏக்களும் கொரோனா பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 2 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

இன்று சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மாணிக்கம் அவர்களுக்கும் மற்றும் திருச்சி மணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகன் அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் மதுரையில் உள்ள மருத்துவமனையிலும் திருச்சி மணச்சநல்லூர் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகன் திருச்சி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.